விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் சாதாரணமாக பிரியாணி உணவகத்திற்கு சென்று உள்ளனர். அப்போது அங்குள்ள ஊழியர்களிடம் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் பிரபல காதல் தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் எட்டு வருடங்களாக காதலித்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு தங்களது ஹனிமூன் புகைப்படங்களால் இணையத்தை ஆக்கிரமித்து வந்த இவர்கள் தற்போது இரட்டை குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாகியுள்ளனர்.

பிரியாணி கடையில் நயன் விக்கி!… கடை ஊழியர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல்!.

இந்நிலையில் நயனும் விக்கியும் அடிக்கடி இரவு நேரங்களில் சென்னையில் உள்ள உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதைப் பற்றி நயன்தாரா ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது பிரியாணி சாப்பிடுவதற்காக உணவகம் ஒன்றுக்கு சென்றுள்ள அவர்கள் அங்குள்ள ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரியாணி கடையில் நயன் விக்கி!… கடை ஊழியர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல்!.