Rajinikanth
தலைவர் 168 படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ரோல் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தலைவர் 168 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

டி.இம்மான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் ஏற்கனவே குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் என மூன்று நாயகிகள் இணைந்திருந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கமிட்டாகி இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

தற்போது அவரின் ரோல் குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரமான வக்கீல் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.