Nayanthara Marriage

Nayanthara Marriage : திருமணம் எப்போது என தன்னுடைய நெருங்கிய வட்டாரங்களில் சூசமாக அறிவித்துள்ளார் நயன்தாரா.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. கிட்டத்தட்ட அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

தற்போதும் கூட தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 63 படம் மட்டுமல்லாமல் டஜன் கணக்கான படங்களை கையில் வைத்துள்ளார்.

மேலும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதும் நாம் அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதே போல் நயன்தாரா தரப்பு ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்ப நிறைய படங்களில் நடித்து வருகிறேன். இன்னும் நிறைய வெற்றி படங்களை கொடுக்க வேண்டும்.

குறைந்தது 100 படங்களிலாவது நடிக்க வேண்டும். அதன் பின்னர் தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். ஏற்கனவே நயன்தாரா கிட்டத்தட்ட 70 படங்களில் நடித்து விட்டார்.

இதனால் கூடிய விரைவில் திருமணம் நடந்து விடும் என்பதால் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.