நயன்தாரா-கவின் நடிக்கும் ‘ஹாய்’ படத்தின் அப்டேட்..

Web Ads

‘ஹாய்’ படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்..

விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறாமல் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. தற்போது அனைத்து கருத்து வேறுபாடுகளும் தீர்க்கப்பட்டு, படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.

இப்படத்துக்கு ‘ஹாய்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வந்த இப்படத்தில் புதிதாக இரண்டு தயாரிப்பாளர்கள் இணைந்திருக்கிறார்கள். தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்களும் இதில் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறார்கள்.

இப்படத்தில், இயக்குநர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜிடம் பல படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகிறார். ’ஹாய்’ குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் தெரிவிக்கையில்,

‘முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்பக் கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது’ என தெரிவித்துள்ளார். இதுவரை 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. அதில் இரண்டு பாடல்கள் முழுமையாக காட்சிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

nayanthara and kavin team up for hi movie
nayanthara and kavin team up for hi movie