Nayanthara About Thala Ajith

எவ்வளவு பேருடன் நடித்தாலும் அவர் மட்டும்தான் எனக்கு ஃபேவரைட் என நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Nayanthara About Thala Ajith : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் எத்தனையோ சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் தொடர்ந்து தன்னுடைய மார்க்கெட்டை இழக்காமல் அதே இடத்தில் நீடித்து வருகிறார்.

இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மட்டுமல்லாமல் தொடர்ந்து பல படங்களில் நடிக்கிறார்.

நெற்றிக்கண் உள்ளிட்ட கதாநாயகியை மையமாகக் கொண்ட படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா பேட்டி ஒன்றில் தன்னுடைய ஃபேவரைட் நடிகர் குறித்து பேசிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏதாவது சினிமாவில் எத்தனை நடிகர்களுடன் இணைந்து நடித்தாலும் தனக்கு எப்போதும் ஃபேவரைட் தல அஜித் தான் என தெரிவித்துள்ளார்.

இவர் தல அஜித்துடன் முதல் முதலாக பில்லா படத்தில் இணைந்து நடித்தார். அதன் பின்னர் ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித் தற்போது நடித்து வரும் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திலும் நாயகியாக நயன்தாரா நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.