Navneet Rana Admitted ICU : பிரபல நடிகையும் எம்.பியுமான நவ்னீத் ராணாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்நிலையில் இவர் கணவர் ரவி ராணா, எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார் நவ்னீத் கவுர்.

கடந்த சில நாட்களுக்கு முன் நவ்னீத்தின் மாமனாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர், நவ்னீத் கவுர் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜயகாந்த் நடித்த அரசாங்கம், கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் கோபிசந்தின் ரணம், ஜூனியர் என்.டி.ஆரின் எமதொங்கா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்திருக்கிறார்.

கடந்த 6 ஆம் தேதி நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.