“நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தில் இருந்து காதல் குறித்த கருத்துக்களை கூறி கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர்தான் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் படம் தான் “நட்சத்திரம் நகர்கிறது”.

முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகும் இப்படத்தில் நடிகர் காளிதாஸ், நடிகை துஷாரா விஜயன், நடிகர் கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என்று ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இப்படத்தின் கதாபாத்திரங்களை வைத்து வித்தியாசமான போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்த நிலையில் ரசிகர்களின் மத்தியில் வைரலானது. அதேபோல் தற்போது காதல் பற்றின பல கருத்துக்களை கூறி கதாபாத்திரங்களின் பெயர்களை அறிமுகப்படுத்துவது போல் இப்படத்தில் இருந்து ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

YouTube video