அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்திற்கு கிடைத்த விருதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் டி. இம்மான்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி இருந்தன.
இந்நிலையில் தற்போது நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் விஸ்வாசம் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது இம்மானுக்கு கிடைத்துள்ளது.
இதனை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்க ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Thanks #NorwayTamilFilmFestival Juries for the honour! #Viswasam #NammaVeettuPillai
Praise God! https://t.co/oDJrYkGfgT— D.IMMAN (@immancomposer) January 16, 2020