நாஞ்சில் விஜயன் மற்றும் மரியாவிற்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?
விஜய் டிவி நாஞ்சில் விஜயன் மற்றும் மரியாவிற்கு குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.
சில மாதங்களுக்கு முன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் சமீபத்தில் மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பும் நடத்தி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது தன் குழந்தையை கையில் வாங்கும் போது இருந்த நெகிழ்ச்சியான தருணத்தை வீடியோவுடன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.
அதில் சித்திரை முழு நிலவில் என்னை அப்பா என்று அழைப்பதற்கு இந்த புவியில் புதிதாய் ஒரு உயிர் பிறந்து விட்டது. வாழ்க்கையில் நான் பட்ட வேதனைகள் எத்தனை எத்தனையோ அத்தனையும் உந்தன் முகம் பார்க்கும் பொழுது மறந்து போனது என் தங்கமே இனிமேல் எந்தன் உலகம் நீதான் என்று பதிவிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram