இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகும் மூன்று திரைப்படங்கள்.. உங்களுடைய பேவரைட் திரைப்படம் எது?
இந்த வாரம் வெள்ளிக்கிழமை மூன்று திரைப்படம் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியாவது வழக்கம். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 10 திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. அந்த வகையில் இந்த வார வெள்ளிக்கிழமை அதாவது மே 16ஆம் தேதி மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
நடிகர் சூரி நடிப்பிலும் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்திலும் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ராஜ்கிரன், சுவாசிக்கா, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் யோகி பாபு நடிப்பிலும் வினீஷ் மில்லேனியம் இயக்கத்திலும் உருவாகி உள்ள ஜோரா கையை தட்டுங்க என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
மூன்றாவதாக சந்தானம் நடிப்பிலும் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ஹாரர் மற்றும் காமெடி கதை களத்தில் உருவாகியுள்ள டிடி நெக்லஸ் லெவல் திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த மூன்று திரைப்படங்களில் நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
