கண்டிப்பாக மறுமுறை செய்யமாட்டேன்: நடிகை சமந்தா ஓபன் டாக்..

‘செம ஹிட்டானது அந்த பாடல். அதற்காக அதுபோல மறுபடி ஆட மாட்டேன்’ என தெரிவித்துள்ளார் சமந்தா. இது பற்றிய விவரம் பார்ப்போம்..

நாகசைதன்யாவை பிரிந்த சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் ஃபேமிலி மேன், சிட்டாடல் ஹனி பன்னி ஆகிய வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குனர்களில் ஒருவரான ராஜுவுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் பொதுநிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வருவது திருமணம் செய்வதற்கான குறியீடாக சொல்லப்படுகிறது.

இச்சூழலில் சமந்தா தனது திரைப்பயணம் பற்றித் தெரிவிக்கையில், ‘நான் ஒரு கவர்ச்சியான பெண் என்று நினைத்ததே இல்லை. அதனை செய்து பார்க்க ஒரு வாய்ப்பாக இருந்ததுதான் புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடல். இதற்கு முன்பு நான் அந்த மாதிரி கவர்ச்சியாக நடனம் ஆடியதில்லை.

எனவே, அதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டேன். இதேபோல், நான் கண்டிப்பாக மறுமுறையெல்லாம் செய்யமாட்டேன். அந்தப் பாடலின் வாய்ப்பு எனக்கு வந்தபோது ஆச்சரியம்தான் ஏற்பட்டது.

எப்போதுமே நான் பாந்தமான, பக்கத்து வீட்டுப் பெண் போன்றுதான் நடிப்பேன். எனவே, என்னை சுற்றியிருந்தவர்கள் எல்லாம் அந்தப் பாடலுக்கு நடனமாட வேண்டாம் என்றுதான் கேட்டுக்கொண்டார்கள். ஆனால், எனக்கு பிடித்திருந்தது.

இதனை ஒரு வாய்ப்பாக பார்த்தேன். பாடலின் முதல் ஷாட்டுக்கு முன்பு, நான் கிட்டத்தட்ட 500 நடனக் கலைஞர்கள் முன்பு நடுங்கிக்கொண்டிருந்தேன். பதற்றமாகவும் இருந்தேன்’ என்றார். இது குறித்து நெட்டிசன்ஸ், ‘எப்படியோ விரைவில் நல்ல மாமா அமைந்தால் சரி’ என கூறி வருகின்றனர்.

samantha feel dancing and song from the film pushpa
samantha feel dancing and song from the film pushpa