கங்கை அமரன் தெரிவித்த கருத்துக்கு, அனுராக் காஷ்யப் வரவேற்பு..
இன்றைய திரைப்பாடல்கள் பற்றி அனுராக் பேசிய மனக்குறை காண்போம்..
பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் ‘இமைக்கா நொடிகள்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தற்போது வெளிவரும் பாடல்கள் பற்றி இவர் தெரிவிக்கையில், அனிருத்தையும் கிண்டலடித்துள்ளார் என்றே தெரிகிறது.
‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும், நித்திலன் சாமிநாதன் இயக்கிய ‘மகாராஜா’ படத்தில் பாசமான அப்பா-மோசமான வில்லனாகவும் அனுராக் நடித்திருந்தார். அனுராக் நடிப்பு மிரட்டலாக இருந்தது.
இந்நிலையில் அனுராக் காஷ்யப் தெரிவிக்கையில், ‘பான் இந்திய படங்கள் என்பதே ஒரு மோசடி. பான் இந்திய படம் எடுப்பதன் நோக்கமே லாபம் சம்பாதிப்பது மட்டும்தான். லாப நோக்கத்திற்காக மட்டுமே பான் இந்திய படம் எடுக்கப்படுகிறது.
முன்பு தெலுங்கு சினிமாவில்தான் பான் இந்திய படங்கள் எடுக்கப்பட்டன. தற்போது, தமிழ்ப் படமும் இந்த போட்டியில் குதித்துள்ளது. இதனால், தமிழில் வரும் எல்லா பாடல்களும் ஆங்கிலத்தில் ” I am coming for you… I am coming for you” என்று தான் வருகிறது. ஏதோ மேற்கு ராக் இசையைக் கேட்பது போல் இருக்கிறது. இது தமிழ்ப் பாடல்கள் இல்லை.
ஒரு காலத்தில், தமிழில் வெளியான ராஜா பாடல்களை கேட்டு நாங்கள் அதை இந்தியில் பயன்படுத்தினோம். ஆனால், இன்று வெளியாகும் பாடல்களில் எந்த அர்த்தமும் இல்லாமல் இருக்கிறது’ என தெரிவித்துள்ளார். இதற்கு இணையவாசிகள், ‘இது உண்மை தான். இப்போது வரும் பாடலைக் கேட்க முடியவில்லை’ என தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக கங்கை அமரன், ‘7 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு இசையமைத்தவரின் பாடலுக்கு வராத கைத்தட்டல், நாங்கள் இசையமைத்த பாடலுக்கு வருகிறது. இதனால்தான் ராயல்டி கேட்கிறோம்’ என ‘குட் பேட் அக்லி’ படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்கள் தொடர்பாக பேசியிருந்தார்.
