நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

Nadigar Sangam Election Results : தமிழ் சினிமா நடிகர் சங்கத்திற்கான தேர்தல் கடந்த மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த நிலையில் ஓட்டு எண்ணாமல் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.

பாண்டவர் அணியில் போட்டியிட்ட விஷால், கார்த்தி வெற்றி - வெளியானது நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள்.!!

இந்த நிலையில் நீதி மன்றம் நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் எனவும் ஓட்டுக்களை எண்ணவும் உத்தரவிட்டது. அதன்படி இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வந்த நிலையில் பாண்டவர் அணி சார்பாக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றுள்ளார்.

அவரைத் தொடர்ந்து பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் கார்த்தி அவர்களின் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் பாண்டவர் அணியில் போட்டியிட்ட கருணாஸ் அவர்களுக்கும் வெற்றி உறுதியாகி உள்ளது.

பாண்டவர் அணியில் போட்டியிட்ட விஷால், கார்த்தி வெற்றி - வெளியானது நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள்.!!

தலைவர் பதவிக்கு போட்டியிட்டு உள்ள நடிகர் நாசர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதனால் அவரும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் பாண்டவர் அணி வெற்றி வாகை சூடி உள்ளது.