நடிகை ஆண்ட்ரியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

Mysskin Apologies to Andrea : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று பிசாசு. இந்த படத்தில் பிசாசை தேவதையாக காட்டியதால் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

ஆண்ட்ரியாவிடம் மன்னிப்பு கேட்டார் இயக்குனர் மிஷ்கின் - ஏன் தெரியுமா??

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கி வருகிறது. நாயகியாக ஆண்டிரியா நடித்துள்ளார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடித்துள்ளார். இந்த படத்தின் சில காட்சிகளை படமாக்கும்போது ஆண்ட்ரியாவை மிகவும் கஷ்டப்படுத்தியதாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். படத்தின் காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான் மிஷ்கின் இவ்வாறு செய்ததால் அதனை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லையாம் ஆண்ட்ரியா.