பாடகியின் கணவருடன் சேர்ந்து சூப்பர் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் மைனா நந்தினி.

Myna Nandini Dance With Sathya : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மைனா நந்தினி. இவர் வெள்ளித்திரையில் தர்ம பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து இதில் நடிகரான யோகேஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் தான் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

பாடகியின் கணவருடன் சேர்ந்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மைனா நந்தினி - வைரலாகும் வீடியோ

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மைனா நந்தினி தற்போது சீரியல் நடிகரும் பாடகி என்எஸ்கே ரம்யாவின் கணவருமான சத்யாவுடன் இணைந்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த வீடியோவை மைனா நந்தினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இவர்கள் இருவரும் வேலைக்காரன் சீரியலில் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகியின் கணவருடன் சேர்ந்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மைனா நந்தினி - வைரலாகும் வீடியோ