அஜித்திற்கு தல என பெயர் வைத்தது யார் என முருகதாஸ் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். ரசிகர்கள் இவரை தல தல என கொண்டாடி வருகின்றனர். அஜித் படங்கள் ரிலீஸ் என்றாலே ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டம் தான்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முருகதாஸ் பேசிய போது அஜித்திற்கு தல என பெயர் வைத்தது யார் என்பதை கூறியுள்ளார்.
ஆம், அஜித்திற்கு தல என பெயர் வைத்ததே ரஜினி தான் என குறிப்பிட்டுள்ளார்.