முருகதாஸ் படத்தில் சரத்குமார் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Murugadoss in Upcoming Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் முருகதாஸ். தொடர் தோல்விப் படங்களால் அடுத்த ஹீரோ கிடைக்காமல் இருந்து வருகிறார். மேலும் முருகதாஸ் ப்ரொடக்ஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கிய இவர் கூட்டுத் தயாரிப்பில் எங்கேயும் எப்போதும் படத்தை தயாரித்தார். இந்த படத்தினை இயக்குனர் சரவணன் இயக்கியிருந்தார்.

வெள்ளத்தில் மிதக்கும் 1,043 கிராமங்கள் : பலி எண்ணிக்கை 251 ஆக உயர்வு..பரிதவிப்பு

முருகதாஸ் படத்தில் சரத்குமார் மற்றும் சந்தீப் கிஷன் - வெளியான சூப்பர் தகவல்.!!

இத்திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தனது இளைய தம்பியை ஹீரோவாக வைத்து வத்திக்குச்சி என்ற படத்தை தயாரித்தார். அதன் பின்னர் ரங்கூன், ராஜா ராணி, மான் கராத்தே, பத்து எண்ணுறதுக்குள்ள, அகிரா ஆகிய படங்களை தயாரித்தார்.

தற்போது சரத்குமார், சந்தீப் கிஷன் ஆகியோரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தினை எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்குகிறார்.

தனுஷ் 43 SECRET-ஐ உடைத்த Director கார்த்திக் நரேன்..!