Will Murugadoss get Thuppakki sentiment again?
Will Murugadoss get Thuppakki sentiment again?

Murugadoss get Thuppakki sentiment again? – தர்பார் படத்தின் முழு படப்பிடிப்பும் மும்பையில்தான் நடக்கவுள்ளதாம். துப்பாக்கி படமும் இதேபோல முழுக்க முழுக்க மும்பையில் உருவாகி இருந்தது.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, யோகி பாபு, நிவேதா தாமஸ், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவுக்கு வந்திருப்பதாகவும் அதனால் ரஜினி சென்னை திரும்பியிருப்பதாகவும் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அதாவது மே 29-ம் தேதி துவங்க உள்ளதாம். இந்த ஷெட்யூலோட இப்படத்தின் முழு படப்பிடிப்பும் மும்பையில்தான் நடக்கவுள்ளதாம்.

துப்பாக்கி படமும் இதேபோல முழுக்க முழுக்க மும்பையில் உருவாகி படம் வெற்றிபெற்றதை போல இந்த படமும் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.