அர்ச்சனாவிடம் சிக்கிய நந்தினி, காப்பாற்றுவாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி நடந்து சென்று கொண்டிருக்க ஏசி சர்வீஸ் செய்ய வந்த திருடர்கள் நந்தினியை பார்க்கின்றனர். உடனே அர்ச்சனாவிற்கு ஃபோன் போட்டு அந்த திருட போன வீட்டில இருந்த பொண்ணு இங்க தனியா நடந்து போயிட்டு இருக்கு மேடம் என்று சொல்லுகிறார். உடனே அர்ச்சனா நீங்க பின்னாடி பாலோ பண்ணுங்க நான் கொஞ்ச நேரத்துல வந்துருவேன் என்று எழுந்து வருகிறார். உடனே அர்ச்சனாவின் அம்மா தடுத்து நிறுத்தி இந்த நேரத்துல எங்க போற என்று கேட்க பார்ட்டிக்கு போறேன் என்று சொல்லுகிறார். இப்படி போய் தான் வாழ்க்கை கெடுத்து வச்சுக்கிட்டு இருக்க என்று சொல்ல உன்ன சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை உங்க அப்பா உன்னை பையன மாதிரி வளர்த்து வச்சிருக்காரு என்று சொல்லி அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்க அர்ச்சனா நீ போய் படு காலையில வந்துருவேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் அருணாச்சலத்திற்கு போன் வர ஒரு பைலை கேட்கின்றனர் அது சூர்யாவிடம் தான் இருக்கிறது நான் போய் வாங்குகிறேன் என்று சூர்யாவின் ரூமுக்கு அருணாச்சலம் வர அங்கு சூர்யா நந்தினி என யாருமே இல்லை. உடனே அருணாச்சலம் மாதவியின் ரூமை தட்டி எழுப்ப உடனே சுரேகாவும் எழுந்து வருகிறார். என்னாச்சுப்பா என்று கேட்க நந்தினிய பாத்தீங்களா காணம் என்று சொல்லுகிறார் சூர்யா கிட்ட கேட்கலாம் இல்லப்பா என்று சொல்ல அவன் என்னைக்கு வீட்டுக்கு வந்து இருக்கான் அவன் இன்னும் வரல நீங்க போய் கொஞ்சம் பாருங்க என்று சொல்ல மூவரும் வீட்டில் இருக்கும் எல்லா இடத்திலும் தேடிப் பார்க்கின்றனர். நந்தினி வீட்டில் இல்லை என்று வந்து சொல்ல இதுதான் நடக்க கூடாதுன்னு நினைச்சேன். ஏதோ என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இங்கே இருந்தா ஆனா நீங்க பண்ண டார்ச்சர்ல எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு இங்கே இருந்து போயிட்டா என்று மாதவி மற்றும் சுரேகாவை திட்டுகிறார்.
எப்படியாவது கண்டுபிடிச்சிடலாம்பா என்று மாதவி சொல்ல நானும் மாப்பிள்ளையும் போய் தேடுறோம் உங்க அம்மா வந்தா சமாளிங்க என்று சொல்லிவிட்டு இருவரும் தனித்தனியாக காரில் தேடுகின்றனர். நந்தினி தனியாக நடந்து கொண்டு வர அர்ச்சனாவின் ஆட்கள் ஒருபுறம் நந்தினியை தேடி வருகின்றனர். கொஞ்ச நேரத்தில் ஒரு சைக்கிள் டீக்கடையில் கொஞ்சம் பேர் டீ குடித்துக் கொண்டிருப்பதை பார்த்த நந்தினி அவர்களிடம் ஊருக்கு செல்வதற்காக பணம் கேட்க யாரும் தரம் இருக்கின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் நந்தினி அமைதியாக ஓரமாக நிற்க அந்த டீக்காரரிடம் வட்டி வசூல் செய்ய சிலர் வருகின்றனர்.
அவர்களிடம் டீக்காரர் காசு கொடுக்க நந்தினி அவரிடம் சென்று எனக்கு 500 ரூபாய் மட்டும் கொடுங்க நான் ஊருக்கு போய் கண்டிப்பாக திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லுகிறார். ஆனால் அந்த டீக்கடைக்காரர் நானே வட்டிக்காக காசு இல்லாமல் இருக்க என்கிட்ட கேட்டா எப்படிமா என்று சொல்லிவிட்டு வட்டி வாங்க வந்தவரிடம் கொடுத்து விடுகிறார். உடனே அந்த வட்டிக்காரரிடம் நந்தினி கேட்க 500 ரூபாய் மட்டும் கொடுங்க என்று சொல்லுகிறார். நீ திருப்பிக் கொடுப்பேன்னு நாங்க எப்படி நம்புறது என்று கேட்டுவிட்டு வேணா தாலியை கழட்டி கொடு 5000 இல்ல பத்தாயிரம் கூட தர என்று சொல்லுகிறார். ஆனால் நந்தினி எதுவும் பேசாமல் இருக்க அந்த நேரம் பார்த்து திருநங்கைகள் மூன்று பேர் வந்து ஒரு பொண்ணு உதவி கேட்டா பண்ணு அப்படி இல்லன்னா விட்டுடு அதுக்குன்னு தாலி கழட்டி கேட்பியா என்று கேட்கின்றனர்.
இந்த தாலியோட அருமை என்னன்னு உனக்கு தெரியுமா? இந்த கடவுள் எங்களை அரைகுறையா படிச்சிட்டு இந்த தாலி ஏறுமானு நாங்க தவமா தவம் இருக்கிறோம் ஆனால் இந்த பொண்ணு முழு பெண்மையடைஞ்சதுக்கு முக்கியமான காரணம் இந்த தாலி. என்று அந்த வட்டிக்காரனிடம் பேசி அனுப்பி வைக்கின்றன. பிறகு நந்தினி இடம் என்னாச்சு என்ன பிரச்சனைமா? என்று கேட்க நந்தினி நடந்த விஷயங்களை அவர்களிடம் சொல்லுகிறார். பிறகு டீக்காரரிடம் ஒரு டீ வாங்கி நந்தினிக்கு கொடுத்து தண்ணீர் கொடுத்து கையில் இருக்கும் காசை கொடுத்து நீ பத்திரமா போயிட்டு வாம்மா என்று தெரிந்த ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர்.இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் மயக்கமான நந்தினி அர்ச்சனா காரில் வீட்டிற்கு கொண்டு வருகிறார். மறுபக்கம் மாதவியும், சுரேகாவும் நந்தினி காணாமல் போன விஷயத்தை அம்மாவிடம் சொல்லக்கூடாது என்று சொன்னவுடன் சுந்தரவல்லி வந்து நிற்கிறார்.
உடனே மினிஸ்டர் இப்பதான் நீ ரத்தினவேல் ஓட பொண்ணு என்ன பண்ணனும்னு நான் சொல்றேன் என்று சொல்லுகிறார். அருணாச்சலம் சூர்யாவிடம் நந்தினியை காணும் என்று சொல்ல கிச்சன்ல இருப்பா என்று சொல்லுகிறார். ஆனால் அருணாச்சலம் நேத்து நைட்ல இருந்து நந்தினி காணும் என்று சூர்யாவிடம் சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.