மலேசியா கிளம்ப முடிவெடுத்த விஜயா, பதறிப்போன ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
மலேசியா கிளம்ப விஜயா முடிவெடுத்ததால் பதறிப் போய் உள்ளார் ரோகினி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் அம்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்ல அதெல்லாம் முடியாது என்று விஜய் உறுதியாக இருக்கிறார் உடனே முத்து அவர்கள் கேட்க மாட்டாங்கன்னு எனக்கு தெரியும் ஆனா இதுக்கு மேல மீனாவோட குடும்பத்தை திருட்டு குடும்பம்னு சொன்னாங்கனா அவ்வளவுதான் என்று மிரட்டுகிறார். உடனே சுருதி நீங்க ரெண்டு லட்சம் வாங்குனது கூட தப்பு இல்ல ஆனா நீங்க அதை வக்கீல் மூலமா வாங்க நீங்க அதுதான் தப்பு மீனா கிட்ட கேட்டு இருந்தாலே கொடுத்திருக்க போறாங்க என்று சொல்லுகிறார்.
உடனே ரோகினியும் மனோஜும் விஜயாவிற்கு ஆதரவாக பேச அண்ணாமலை எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம் உன்னால் தான் அவங்களுக்கு அஞ்சு லட்ச ரூபா நஷ்டம் அந்த காசை நீதான் கொடுக்கணும் என்று சொல்லுகிறார். நான் எப்படி கொடுக்க முடியும் என்று கேட்க அதெல்லாம் எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு நீ என் பொண்டாட்டியா போயிட்ட கஷ்டத்துலயும் நான் பங்கு எடுத்துக்கணும் என்று சொல்லி நான் கொடுக்கிற என்று ஒப்புக்கொள்கிறார். முத்துவும் மீனாவும் உன்னால முடியாது அப்பா என்று சொல்ல, என்னோட ஃபியூச்சன் காசு வரும் அது பத்தாது தான் அதுக்கு பதில் வேலைக்கு போகலாம்னு இருக்கேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.முத்து எவ்வளவு சொல்லியும் அண்ணாமலை முடிவில் உறுதியாக இருக்கிறார்.
விஜயா, ரோகினி மற்றும் மனோஜ் ரூமுக்கு வந்து உட்கார்ந்த விட்டு சோகமாக இருக்கிறார். இன்னும் அதையே நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா ஆன்ட்டி என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல விடுங்க பாத்துக்கலாம் என்று சொல்லுகிறார். எனக்கு அது கூட பிரச்சனை இல்லம்மா ஒரு பூ கட்டறவங்க கிட்ட எல்லாம் கடன்காரனா இருக்க புடிக்கல என்று சொல்லி மனோஜிடம் காசு கேட்கிறார். ஆனால் மனோஜ் நைஸ் ஆக நழுவி விட, உடனே ரோகினி இடம் கேட்க என்கிட்ட அவ்வளவு இல்ல ஆண்ட்டி என்று சொல்லுகிறார். உடனே மலேசியா போகலாம் என்று விஜயா சொல்ல ரோகினி அதிர்ச்சி அடைந்து எதுக்காண்டி அங்கெல்லாம் என்று கேட்கிறார். உங்க அப்பாவ ரொம்ப நாளா பாக்கணும்னு நினைச்சேன் அவர பாத்துட்டு தேவையான பணம் வாங்கிட்டு வந்துடலாம் என்று சொல்ல அங்கெல்லாம் நினைச்ச உடனே போக முடியாது ஆன்ட்டி நம்ம மேல ஏதோ தப்பு இருக்குன்னு சொல்லி நம்மளையே ஜெயில்ல போட்ருவாங்க என்று சொல்லி விஜயாவை பயமுறுத்தி நாம் மூன்று லட்சம் ரெடி பண்றேன் என்று சொல்லுகிறார். சரி நீ மூன்று லட்சம் ரெடி பண்ணு அந்த ரெண்டு லட்சம் யாரு திருடுனாங்கன்னு என்று போலீஸிடம் கம்ப்ளைன்ட் பண்ணி நான் கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.உடனே மனோஜ் நான் தான் காசு இல்லன்னு சொன்னேன்ல நீ எதுக்கு குடுக்குறன்னு ஒத்துக்கிட்ட என்று ரோகினியை திட்ட அதான் ஜீவா கொடுத்த காசு இருக்குல்ல என்று ரோகிணி கேட்க அதெல்லாம் எப்பயோ செலவாகிடுச்சு என்று சொல்லுகிறார் மனோஜ். அது என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல அதை நம்பி தானே நான் இப்ப சொல்லிட்டேன் என்று சொல்ல நீ என்கிட்ட கேட்டு இருக்கணும் என்று மனோஜ் சொல்லுகிறார்.
ரோகிணி வித்யாவை சந்தித்து நடந்த விஷயங்களை சொல்ல கர்மா என்றது கரெக்ட் தான் நடக்குது நீ மீனா கிட்ட இருந்து ரெண்டு லட்சம் ஏமாத்த நான் திருப்பி 5 லட்சமா குடுக்குற மாதிரி வருது பாத்தியா என்று சொல்ல ரோகிணி டென்ஷன் ஆகி நானே என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்க டென்ஷன் பண்ணாத என்று சொல்லுகிறார். போலீஸ் ஸ்டேஷன்ல வேற கம்பிளைன்ட் கொடுக்கப் போறேன்னு சொல்லி இருக்காங்க முதல்ல அதுக்கு ஒரு முடிவு பண்ணனும் என்று அந்த இரண்டு லட்சத்தை ரெடி பண்ணி பார்வதி ஆண்டிகிட்ட கொடுக்கணும் அதுக்கு ஒரு பிளான் வச்சிருக்கேன் என்று சொல்லுகிறார்.
முத்து,மீனா செருப்பு தைக்கும் தாத்தா பாட்டி இடம் வருகின்றனர். அவர்கள் புது டிரஸ் போட்டுக் கொண்டிருக்க என்ன விசேஷம் தாத்தா என்று கேட்கின்றனர் அதற்கு இன்னைக்கு எங்களோட கல்யாண நாள் உங்களுக்காக டிரஸ் எடுத்து இருக்கோம் என்று சொல்லி கொடுக்கின்றனர். நாங்க எந்த வருஷமும் கொண்டாட வந்தது கிடையாது, எங்களுக்கு சொந்தம் யார் இருக்கா ஆனா இப்பதான் நீங்க இருக்கீங்கள அதனாலதான் உங்ககிட்ட சொன்னோம் என்று சொல்லுகிறார். உடனே முத்து அதுக்கு என்ன இப்போ உங்க கல்யாண நாள் எப்படி கொண்டாடலாம் பாருங்க என்று சொல்லி உடனே சத்யாவிற்கு ஃபோன் போட்டு சில பொருட்களை வாங்கி வர சொல்லுகிறார். சத்தியா ஃபுட் டெலிவரி பாயாக வந்து நிற்க மீனா நீ எதுக்கு இந்த வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன் என்று கோபப்பட முத்து எனக்கு ஏற்கனவே தெரியும் இந்த வேலைக்கு என்ன அப்பதான் பொறுப்பு வரும் என்று சொல்லுகிறார். சத்தியா மாலை ஸ்வீட் வாழைப்பழம் என அனைத்தையும் வாங்கி வர தாத்தா பாட்டி இடம் வந்து கொடுக்க அவர்கள் மாலை மாற்றி ஸ்வீட் ஊட்டி விடுகின்றனர். முத்து ரோட்டில் போகும் நபர்களுக்கு ஸ்வீட் கொடுத்து வாழ்த்து சொல்லுகின்றனர் அவர்களும் தாத்தா பாட்டிக்கு திருமண நாள் வாழ்த்து சொல்லி ஆசீர்வாதம் வாங்கி செல்கின்றனர்.
பார்வதியை வந்து சந்தித்த ரோகினி என்ன சொல்லுகிறார்? அதற்கு பார்வதியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.