இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!
இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி முற்றிலும் புதுவிதமான ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
ஏற்கனவே ரவீந்தர், சுனிதா, ரியா, அர்ணவ்,தர்ஷா குப்தா, வெளியேறிய நிலையில் இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் சிவகுமார் மற்றும் சாச்சனா இருந்து வந்தனர்.
சிவக்குமார் தான் குறைவான ஓட்டுக்களுடன் இருந்து வந்தார் ஆனால் ஆண்கள் அணியினர் அவரைக் காப்பாற்றிய நிலையில் அவருக்கு அடுத்ததாக சாச்சனா இருக்கிறார்.
இந்த வாரம் சாச்சனா வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.