Pushpa 2

காலேஜில் அசிங்கப்படும் இனியா, அதிர்ச்சியில் ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

இனியா காலேஜில் அசிங்கப்பட ,ராதிகா அதிர்ச்சியாக உள்ளார்.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update

தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் ராதிகாவின் அம்மா கோபி பாக்கியா வீட்டில் சண்டை போட்ட வீடியோவை காட்ட ராதிகா இன்னும் டென்ஷன் ஆகிறார். அந்த நேரம் பார்த்து கோபி உள்ளே வர உங்களுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லையா பாக்யா ரெஸ்டாரன்ட்ல சாம்பார் சாதம் ஆர்டர் எடுத்தா என்ன பிரியாணி ஆர்டர் எடுத்தா உங்களுக்கு என்ன நீங்க எதுக்கு விஷத்தை கலக்குறீங்க என்று கோபமாக கேட்க அதற்கு கோபி அது விஷம் கிடையாது கெட்டுப்போன இறைச்சி என்று சொல்ல கெட்டுப் போனாளே விஷம் தானே என்று ராதிகா சொல்லுகிறார். அதை நான் பண்ணல அந்த இடியட் ஆனந்த் பண்ணா என்று சொல்லுகிறார். அவங்களுக்கு உங்க மேல கோவம் இருக்க தான் செய்யும் யாராயிருந்தாலும் கம்ப்ளைன்ட் கொடுக்க தான் செய்வாங்க அதை விட்டுட்டு அவங்க கிட்ட போய் கோபப்பட்டு இருக்கீங்க. உங்க பசங்க உங்கள ரோல் மாடலா வெச்சு வந்தா எப்படி இருக்க முடியும் என்றெல்லாம் கேட்க கோபி காலையில் என்ன டென்ஷன் பண்ணாத என்று சென்று விடுகிறார்.

மறுபக்கம் இனியா காலேஜில் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க இனியாவின் தோழிகள் போனில் சோசியல் மீடியாவில் உங்க குடும்பத்தை பற்றி தான் பேசிக்கிட்டு இருக்கு என்று சொல்ல இனியா ஒன்றும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து விடுகிறார். பிறகு இரண்டு தோழிகள் உட்கார்ந்து போனில் வந்த விஷயத்தைப் பற்றி பேச இனியா டென்ஷனாகி எழுந்து வந்து விடுகிறார். வரும் வழியில் இருக்கும் அனைவரும் இனியாவிடம் வந்து செல்பி எடுத்துக்கொண்டு இவங்க அப்பா அம்மா தான் சண்டை போட்டாங்க என்றெல்லாம் பேச இனியா கோபத்துடன் வீட்டிற்கு வந்துவிடுகிறார்.

என்ன இனியா இப்பவே வந்துட்ட என்று கேட்க காலேஜ்ல ரொம்ப பேமஸ் ஆகிட்டேன் என்று சொல்லுகிறார் அதற்கு ஜெனி நீதான் டான்ஸ் கம்பெட்டிஷன்ல ஜெயிச்சிட்ட இல்ல அதனால இருக்கும் என்று சொல்ல அதைவிட இப்ப ரொம்ப பெருமையா இருக்கு இவங்க ரெண்டு பேரும் போட்ட சண்டே தான் இப்ப காலேஜ் ஃபுல்லா பேசிக்கிட்டு இருக்காங்க என் மூஞ்சி முன்னாடி போனை எடுத்துட்டு வந்து நீட்டுறாங்க என்றெல்லாம் சொல்ல பாக்யா என் மேல எந்த தப்பு இருக்கு சொல்லு இனியா என்று கேட்கிறார். நீ எந்த தப்பும் பண்ணலமா எதுவும் பண்ணல நீ அவர்கிட்ட சண்டை போடாம இருந்திருக்கலாம்ல என்று கேட்க மீண்டும் பாக்யா அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்லுகிறார். உடனே இனியா உன் பக்கமும் நியாயம் இருக்கு ஆனா அவர் சொல்ற விஷயத்துலயும் நியாயம் இருக்கு என்று இனியா சொல்லுகிறார்.

உங்க அப்பா பக்கம் என்ன நியாயம் இருக்கு இனியா என்று ஜெனி கேட்க அதற்கு உன்மேல நான் எந்த தப்பும் சொல்லவில்லை ஆனால் நான் கஷ்டப்பட்டு பேசும்போது அதை கொஞ்ச நேரம் கேளுங்கன்னு தான் சொல்ற உங்களால எங்கள யோசிச்சு பாக்க முடியல நாங்க எவ்ளோ கஷ்டப்படுகிறோம் தெரியுமா என்று சொல்ல உங்களை யோசிக்காமல் இல்லை இனியா இதுக்கப்புறம் நான் இந்த பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லு நீயா கோபப்பட்டு வெளியே போய் உட்கார்ந்து விடுகிறார். ஜெனி அவருக்கு ஆறுதல் சொல்ல போக கொஞ்ச நேரத்தில் இனியா நான் டாடிய பார்க்க போறேன் என்று கிளம்புகிறார் ஜெனி வேண்டாம் என்று சொல்லியும் நான் கோபமா இருக்கேன் போக தான் போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

உடனே ராதிகாவின் வீட்டிற்கு வந்த இனியா ராதிகா உள்ளே வர சொல்லுகிறார். டாடி இல்லையா என்று கேட்க வெளியே போயிருக்காரு என்று சொன்னவுடன் சரி நான் கிளம்புறேன் என்று இனியா கிலம்ப ராதிகாவின் அம்மா தடுத்து நிறுத்துகிறார். உடனே ராதிகா நீ போ இனியா என்று சொல்லியும் ராதிகாவின் அம்மா நில்லுன்னு சொல்றேன்ல என்று சொல்லுகிறார். இனியாவிடம் தேவையில்லாமல் பேச அதற்கு ராதிகா சின்ன பொண்ணு கிட்ட இருக்கு இதெல்லாம் பேசிக்கிட்டு இருக்க என்று திட்டுகிறார். உடனே பாக்யாவை பற்றி பேச இனியா எங்க அம்மா அப்படிப்பட்டவங்க கிடையாது என்று சொல்லுகிறார். உங்க அம்மாவால தான் எல்லா பிரச்சனையும் என்று சொல்ல எங்க அம்மாவால எந்த பிரச்சனையும் இல்ல இவங்களால தான் எல்லா பிரச்சனையும் என்று ராதிகாவின் மேல் சொல்கிறார். இவங்க வந்ததுனாலதான் எங்க வீட்ல பிரச்சனை என்று சொல்ல ராதிகா அதிர்ச்சியாகி நிற்கின்றார்.

உடனே ஜெனி வர என்ன கேட்கிறார்கள்?அதற்கு ஜெனியின் பதில் என்ன? ராதிகா என்ன சொல்லப் போகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update