Mohan Vaidya to join Big boss season 3 : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, kamal Haasan

Mohan Vaidya to join Big boss season 3 :

தற்போது பிரபல கர்நாடக பாடகர் மோகன் வைத்யாவும் இந்த சீசனில் பங்கேற்பதாக தகவல் கசிந்துள்ளது.

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் . இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வனில் இணைந்த இன்னொரு பிரபலம் – யார் தெரியுமா?

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளார். இதில் தற்போதுவரை ஜாங்கிரி மதுமிதா மட்டுமே உறுதியாக பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது பிரபல கர்நாடக பாடகர் மோகன் வைத்யாவும் இந்த சீசனில் பங்கேற்பதாக தகவல் கசிந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.