MK Stalin slams PMK
MK Stalin slams PMK

MK Stalin slams PMK – சென்னை: அதிமுகவை மிக மோசமாக விமர்சித்துவிட்டு தற்போது அதே கட்சியுடன் பாமக கூட்டணி வைத்து இருக்கிறது, வெட்கம் இல்லை, சூடு இல்லை, சொரணை இல்லை என்று ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்.சபா தேர்தலில் அதிமுகவுடன் பாமக நேற்று கூட்டணி வைத்து, அதற்கான உடன்படிக்கை கையெழுத்து போடப்பட்டது. அதிமுக கூட்டணியில் மொத்தம் 7 தொகுதிகளில் பாமக போட்டியிட உள்ளது.

இந்நிலையில் இந்த கூட்டணியை திமுக தலைவர் ஸ்டாலின் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வேலூரில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‘ பாமக அதிமுகவை விமர்சித்துவிட்டு அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாசுக்கு வெட்கம், சூடு, சூரனை எதுவும் கிடையாது.

மக்களை பற்றி கொஞ்சமும் கவலைபடாத கட்சிதான் பாமக என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், அதிமுகவிற்கு எதிராக ‘அதிமுகவின் கதை’ என்று புத்தகம் போட்டவர் டாக்டர் ராமதாஸ்.

அதிமுகவிற்கு எதிராக தொடர்ந்து பேசிவிட்டு இப்போது அவர்களுடன் சென்று கூட்டணி வைத்து இருக்கிறார்கள்.

ஜெயலலிதா, எடப்பாடி, ஓ. பன்னீர்செல்வம் என்று எல்லோரையும் விமர்சித்தவர்தான் ராமதாஸ்.2009 தேர்தலில் ஏற்கனவே அதிமுக -பாமக கூட்டணி மிக மோசமாக தோல்வி அடைந்தது.

2009 தேர்தல் நிலைதான் தற்போது 2019 தேர்தலிலும் பாமகவுக்கு ஏற்படும் என்று கூறினார். இந்த கூட்டணி தேர்தலில் மிக மோசமாக தோல்வியை சந்திக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

பின்னர் ராமதாஸ் குறித்து கூறுகையில், அதிமுகவின் கதை என்ற பெயரில் புத்தகம் எழுதி அந்தக் கட்சியை கடுமையாக விமர்சித்த ராமதாஸ், இன்று அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்.

ராமதாசுக்கு வெட்கம் இல்லை, சூடு இல்லை, சொரணை இல்லை என்று ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.