MK Stalin Questions to Tamil Nadu Government
MK Stalin Questions to Tamil Nadu Government

நீட் தேர்வு விஷயத்தில் தொடர்ந்து தமிழக அரசு மௌனம் காத்து வருவது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

MK Stalin Questions to Tamil Nadu Government : இந்தியாவின் மருத்துவன் பட்டப்படிப்பை பயில நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு அறிவித்து ஒவ்வொரு வருடமும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் தமிழகத்தில் மருத்துவ படிப்பை பயனர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. நம்முடைய கல்விமுறைக்கு நீட் தேர்வு கடினமான ஒன்று.

இதனால் தமிழகத்தில் மருத்துவக் கல்வி பயில ஆசைப்படும் ஏழை எளிய மாணவர்களுக்கு இது எட்டாக்கனியாகவே இருக்கிறது என பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த கொரானா பேரிடர் காலத்திலும் மருத்துவ படிப்பு பயில நீட் தேர்வு கட்டாயம் என இந்திய மருத்துவ கவுன்சில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

உதயநிதியால் இரண்டாகும் திமுக?? – கு.க.செல்வம் பேச்சால் பரபரப்பு..!

இதனால் தமிழக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் திமுகவின் தலைவருமான மு க ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி, நீட் தேர்வை நடத்த முடியாது என பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து தன் பார்க்க வேண்டும்.