Minister Rajendra Balaji
Minister Rajendra Balaji

Minister Rajendra Balaji – ஸ்ரீவில்லிபுத்தூர்: வீட்டுக்கு ஒரு கார் என்ன, ஹெலிகாப்டரே கொடுத்தாலும் தினகரன் ஜெயிக்க மாட்டார்.. என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தினகரன் குறித்து கிண்டலாக பேசியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்காசி நாடாளுமன்ற வேட்பாளரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் கூட்டத்தில் பேசுகையில், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஏராளமான கட்சியினரை சேர்த்து கொண்டு ஏராளமான பிரதமர் வேட்பாளர்களின் பெயரை சொல்லி வாக்குக் கேட்கிறார்கள். ஆனால் சவால் விட்டு கூறும் ஒரே பிரதமர் மோடி மட்டுமே என தெரிவித்தார்.

அமமுக கட்சி குறித்து பேசுகையில், அமமுக கட்சி களத்திலேயே இல்லையே. அந்த கட்சி நேற்றுதான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த தேர்தல் அறிக்கையில் என்ன வேணாலும் இருக்கட்டும்.

தனி சேட்டிலைட், ஸ்கார்பியோ கார், வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் என எதை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும். அந்தக் கட்சிதான் களத்திலேயே இல்லையே என கிண்டலடித்து பேசினார்.

டிடிவி தினகரன் தேனியில் தான் போட்டியிடலாம் என அறிவித்து இருந்தார்.ஆனால் கடைசியில் அவர் போட்டியிடவில்லை.

20 ரூபாய் டோக்கனை கொடுத்து ஆர் கே நகர் மக்களை ஏமாற்றியது போல், தேனி மக்களையும் ஏமாற்ற முடியாது என அவருக்கு நன்றாக தெரியும்.

எனவே விரைவில் அமமுகவுக்கு மூடுவிழா நடத்தப்படும். அங்கிருப்பவர்கள் மீண்டும் அதிமுகவுக்கே வந்துவிடுவர் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.