மீரா மிதுன் ஜெயிலிலிருந்து வெளியே வந்தால்தான் அந்த படம் ரிலீசாகும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Meera Mitun in Peya Kanom Movie Update : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இதன் மூலம் மிகுந்த சர்ச்சைக்குள்ளான இவர் தொடர்ந்து பல நடிகர்கள் குறித்தும் நடிகைகள் குறித்து தவறாக பேசி சர்ச்சையில் சிக்கிய வண்ணம் இருந்தார்.

ஐபிஎல் ரகள இன்று : ரசிகர்களுக்கு அனுமதி

மீரா மிதுன் ரிலீஸானால் தான் அந்த படம் வெளியாகும் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்

பாடகி தீ குறித்தும் அவருடைய ஜாதி குறித்து தவறாக பேசி சர்ச்சையில் சிக்கியவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது வரை ஜாமீன் கிடைக்காமல் ஜெயிலில் இருந்து வருகிறார். இந்த நிலையில் மீரா மிதுன் நாயகியாக நடித்து வரும் பேய காணோம் படத்தின் இயக்குனர் அளித்த பேட்டி ஒன்றில் 90 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்து உள்ளன. மீரா மிதுன் ஜெயிலில் இருந்து வெளியானால் தான் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு படம் ரிலீசாகும் என தெரிவித்துள்ளார்.

Velavan Stores-ல் Shopping எப்படி இருந்துச்சு..?? பிரபலங்களின் கருத்து..! | T.Nagar | Chennai | HD

இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது இயக்குனர் கதை கூறிக்கொண்டிருக்கும் போதே சிகரெட் பிடித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோவும் சமூக வலைத் தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.