Meera Mitun Charge to Interview

இன்ஸ்டாகிராமில் 30 நிமிட பேட்டி கொடுக்க பணம் கேட்டுள்ளார் மீராமிதுன். அது குறித்த ஆதாரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Meera Mitun Charge For Interview : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சூர்யா மற்றும் விஜய்யை விமர்சனம் செய்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக விஜய்யை விடாமல் சீண்டிக் கொண்டே இருக்கிறார். சமீபத்தில் தமிழ்நாட்டு மீடியாக்கள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

படத்த பலமுறை பார்த்துட்டேன்.. மாஸ்டர் எப்படி இருக்கு தெரியுமா? – வெளியானது முக்கிய பிரபலத்தின் அதிரடி விமர்சனம்

எந்த ஒரு மீடியாவும் எனக்கு ஆதரவாக இல்லை என சாடியிருந்தார். மேலும் மீடியாக்கள் யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்காக தானே பேசுவீர்கள் எனவும் கூறியிருந்தார்.

இந்த வீடியோவின் கமெண்ட்டில் ரசிகர் ஒருவர் மீரா மிதுன் இன்ஸ்டாகிராமில் 30 நிமிட லைவ் பேட்டிக்காக ரூபாய் 20 ஆயிரம் பணம் கேட்ட உரையாடலை ஷேர் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதேபோல் சில தினங்களுக்கு முன்னர் இலங்கையைச் சார்ந்த இளைஞர் ஒருவர் மீரா மிதுனிடம் சினிமா வாய்ப்பு குறித்து கேட்ட போது சிவகார்த்திகேயனிடம் சிபாரிசு செய்ய ஒரு ட்வீட்டிற்கு ரூபாய் ஒரு லட்சம் கேட்டார் எனவும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விழாவில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ குறித்து ரசிகர்களின் சில கமெண்ட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.