பிரபலம் ஒருவருடன் மீரா மிதுன் ஆபாசமாக பேசும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டு பேட்டி கொடுத்துள்ளார் முன்னாள் மேனேஜர் வெங்கட்.

Meera Mithun Phone Call Audio : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவராக உள்ளே சென்று ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றவர் மீரா மிதுன்.

இவர் தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி என ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிக்க உள்ள அக்கினி சிறகுகள் என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.

நம்ப லொஸ்லியவா இது.? என்று வியக்கும் பார்வையாளர்கள், பிக் பாஸ் வீட்டில் நடந்தது.!

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதும் சரி, வெளியேறிய பின்பும் சரி இவர் மீது தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் இவரின் முன்னாள் மேனேஜர் வெங்கட் என்பவர் கலக்கல் சினிமாவிற்கு அளித்த பேட்டியில் மீரா மிதுன் திரைபிரபலம் ஒருவருடன் ஆபாசமாக பேசும் ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

ஆனால் மீராவுடன் பேசும் அந்த நபர் யார் என்பதை அவர் கூற விரும்பவில்லை, முடிந்தால் கண்டு பிடித்து கொள்ளுங்கள் என கூறி விட்டார். இதோ அந்த வீடியோ

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.