The Love Story of Losliya
மனமாற்றத்தை ஆடை மாற்றத்தின் மூலம் வெளிப்படுத்திய லொஸ்லியா, கவினின் ஆடையை போட்டு கொண்டு காதலை வெளிப்படுத்துகிறார்.

The Love Story of Losliya : மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது உச்சத்தை அடைந்து உள்ளது.

சண்டை, காதல், சிரிப்பு மற்றும் அழுகை என மொத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவே, சென்ற சில வாரங்களாக நடந்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

அதே சமயம், வீட்டில் நடக்கும் எல்லா விஷயங்களும் பேசப்படுவது இல்லை. அதிகப்படியாக பேசப்படுவது மற்றும் பார்க்கப்படுவது லொஸ்லியா மற்றும் கவின் இருவரின் நட்பு கலந்த காதல். மேலும் சாண்டி, முகின் இவர்களுடன் தர்ஷன் இவர்களின் காமடியுடன் கூடிய பாடல்கள்.

கவின் வீட்டினுள் வந்தவுடன் சாக்க்ஷியை காதலிப்பதாகவும், தான் மனதில் நினைத்து வைத்து இருக்கும் பெண் போலவே சாக்க்ஷி இருப்பதாகவும் கூறி அவரை காதலித்தார். பின், அவர்களுக்கு இடையே பிரிவு வரவே அந்த சண்டை பெரிதாக மாறும் முன்னதாகவே சாக்க்ஷி வெளியேறிவிட்டார்.

பற்களின் கறை மறைந்து பற்கள் வெண்மையாக ஜொலிக்க வேண்டுமா? இதோ சில இயற்கையானஉணவு முறைகள்!.

இந்த நிலையில் லொஸ்லியா, கவினை பற்றிய தனது மனநிலையை தெளிவாக சேரனிடம் கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து நேற்று ஒளிபரப்பான எப்பிசோடில் லொஸ்லியா கவினுடைய ஆடையை அணிந்து இருந்தார்.

கவின் எப்பொழுதும் போடும் சிவப்பு நிற ஆடையை, நேற்று லொஸ்லியா அணிந்து இருந்தார். இதனை நிறைய பார்வையாளர்கள் கவனிக்காத பட்சத்தித்தில், நெட்டிசன்கள் கவனித்து இருக்கின்றனர்.

kavin and losliya

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.