Meera Mithun Tweet About Kamal Daughter
கமல் ஹாசன் மகளுக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா? என கேட்டு அதிர்ச்சிகர ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர் மீரா மிதுன்.

இந்த சர்ச்சைகளால் அவர் நடிக்க கமிட்டாகி இருந்த நம்ம வீட்டுப் பிள்ளை படத்திலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் ஆகியோர் இணைந்து நடித்து வரும் அக்னி சிறகுகள் என்ற படத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு பதிலாக கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மீரா மனிதன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் மகளுக்கு இன்னொருவரின் கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியே இல்லையா என கேள்வி கேட்டு தாக்கியுள்ளார்.

இதனால் தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.