கணவரின் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் மீனா கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. இவருக்கு வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில் நைனிகா என்ற மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மீனாவின் கணவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

கணவரின் மறைவுக்கு பிறகு கையெடுத்து கும்பிட்டு மீனா வைத்த கோரிக்கை - தீயாக பரவும் பதிவு

மேலும் இவர் உயிரிழந்ததற்கு காரணம் கொரோனா மட்டுமல்ல என பல்வேறு விஷயங்கள் உள்ளதாக சமூக வலைதளங்களில் விதவிதமான தகவல்கள் பரவி வந்தன. என்னை அறிந்த மீனா கோரிக்கை ஒன்றை வைத்து பதிவு செய்துள்ளார்.

கணவரின் மறைவுக்கு பிறகு கையெடுத்து கும்பிட்டு மீனா வைத்த கோரிக்கை - தீயாக பரவும் பதிவு

அன்பான கணவரை இழந்து மிகுந்த வருத்தத்தில் உள்ளோம். தயவுசெய்து எங்களுக்கும் தனிப்பட்ட சுதந்திரம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். கணவரின் மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என வேண்டி கேட்டுக் கொண்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.