Master Ticket Booking Update

பொங்கலுக்கு ரிலீசாகும் மாஸ்டர் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Master Ticket Booking Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் தாஸ் அவர்களும் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து படம் பொங்கலுக்கு வெளியாக தயார் நிலையில் உள்ளது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யூ ஏ சான்றிதழ் அளித்திருப்பதாக இரு தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

மேலும் இப்படத்தை பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது டிக்கெட் புக்கிங் தொடங்குவது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

அதாவது வரும் ஜனவரி 7ஆம் தேதி முதல் மாஸ்டர் படத்தின் டிக்கெட் புக்கிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.