Master Release Update
Master Release Update

மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாது என்பது போல போலி கணக்கிலிருந்து பதிவு ஒன்று பதிவாகியுள்ளது.

Master Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், தீனா, வர்ஷா பொல்லம்மா, விஜய் டிவி ரம்யா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் பெரும்பாலான படங்கள் OTT வழியாக வெளியாகி வருகின்றன.

அவ்வளவு ஏன் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் கூட அக்டோபர் 30-ஆம் தேதி அமேசன் பிரைம் வீடியோவில் வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் பட ரிலீஸ் எங்களுக்கே பெரிய ஏமாற்றம் தான்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்.!!

மாஸ்டர் படத்தையும் இதே போல் OTT வழியாக வெளியிட பல நிறுவனங்கள் போட்டி போட்டு வியாபாரம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் டிவி தீனா பெயரில் உலா வரும் போலி கணக்கில் மாஸ்டர் முதல் நாள் முதல் காட்சி இல்லை என்று மனமுடைந்து பதிவிட்டு இருப்பது போல பதிவு ஒன்று பதிவாகியுள்ளது.

இது போலி கணக்கு என அறியாத விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாஸ்டர் படத்தை நிச்சயமாக திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என படக்குழு உறுதியாக கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.