Lokesh Kanagaraj About Master

மாஸ்டர் ரிலீஸ் ஆகாதது எங்களுக்கே மிகப்பெரிய ஏமாற்றம் தான் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

Lokesh Kanagaraj About Master Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மாஸ்டர்.

விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் என பலர் நடித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்தது.

ஆனால் கொரானா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வருகிறது.

இது குறித்து லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் என ஆறு மாதத்திற்கு முன்னரே திட்டமிட்டு குறுகிய காலத்தில் படத்தை விருவிரவென முடித்தோம்.

ரிலீசுக்கு பத்து நாள் இருக்கும் போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் ரிலீஸ் தள்ளிப்போனது.

ரஜினி, கமல் படம் என்னாச்சு? லோகேஷ் கனகராஜ் விளக்கம் – இவரே இப்படி சொன்னா எப்படி??

திட்டமிட்டபடி மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது எங்கள் எல்லோருக்கும் ஏமாற்றம் தான். தியேட்டர்கள் திறக்கப்பட்டு புதிய விதிகள் என்ன என்பது தெரியவந்த பிறகு இப்படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும்.

அனேகமாக மாஸ்டர் திரைப்படம் அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியாகலாம் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மாஸ்டர் பொங்கல் ரிலீசாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் லோகேஷ் மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியானாலும் அன்று அனைவருக்கும் கொண்டாட்டம்தான் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.