Master Release in August 14
Master Release in August 14

ஆகஸ்ட் 14ம் தேதி மாஸ்டர் ரிலீஸ் என OTT நிறுவனம் ஒன்று விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Master Release in August 14 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லனாக நடிக்க சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், தீனா, ஆண்ட்ரியா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் ஏப்ரல் 9ம் தேதியே ரிலீசாக இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப் போனது. இதனால் அமேசான் ப்ரைம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த படத்தை ஓட்டிகிட்டு வழியாக வெளியிட பேச்சுவார்த்தை நடத்தின.

ஆனால் மாஸ்டர் படக்குழு படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வோம் என திட்டவட்டமாக அறிவித்தது. இந்த நிலையில் அமேசான் ப்ரைம் தளத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாஸ்டர் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுளளது.

இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது குறித்து விசாரிக்கையில் ஹாலிவுட்டில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தான் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

மாஸ்டர் திரைப்படம் படக்குழு திட்டமிட்டபடி தியேட்டர்கள் திறந்த உடனே தான் ரிலீஸாகும் என உறுதியாகியுள்ளது.