லாக் டவுனில் உடலை முரட்டுத்தனமாக மாற்றியுள்ளார் மாஸ்டர் பட நடிகர்.
Master Mahendran in Latest Photos : தமிழ் சினிமாவின் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, சேட்டன், ஸ்ரீமன், சஞ்சீவ், மகேந்திரன், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் விஜய்சேதுபதியின் இளம்வயது கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் மாஸ்டர் மகேந்திரன். மாஸ்டர் திரைப்படத்தின் கதை இவளிடம் இருந்து தான் தொடங்கும். சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும் செம மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மகேந்திரன்.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக சில படங்களில் நடித்து வரும் இவருக்கு மாஸ்டர் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. லாக் டவுனில் இவர் தன்னுடைய உடலை முரட்டுத்தனமாக மாற்றியுள்ளார்.
இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.