Master Audio Launch
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி அதிரடி அப்டேட் வெளியாகியுள்ளது.

Master Audio Launch Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இதனை படக்குழு உறுதியாக அறிவித்துள்ளது.

இது குறித்து சன் டிவி வெளியிட்டுள்ள அறிக்கையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும் எனவும் அறிவித்துள்ளது.