Master Album Record Update
Master Album Record Update

Master Album Record Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மாஸ்டர்.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன், ஸ்ரீநாத், மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமல் படுத்துவதற்கு முன்பாகவே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்துவிட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஆல்பம் யூட்யூபில் 350 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருப்பதாக அனிரூத் அட்டகாசமான வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் இந்த தகவலை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CEMiYloh8br/?igshid=132z41qyo811t
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.