Mannavan Vanthanadi Movie Update
Mannavan Vanthanadi Movie Update

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி நான்கு வருடங்களுக்கு முன்னர் கைவிடப்பட்ட திரைப்பட மீண்டும் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mannavan Vanthanadi Movie Update : தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என அனைவராலும் கொண்டாடப்படும் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் தியேட்டரில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் டிவியில் பார்த்துவிட்டு பலரும் சூப்பராக இருக்கு என பாராட்டுவார்கள்.

4 வருடத்திற்கு முன்னர் இவரது இயக்கத்தில் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் தான் மன்னன் வந்தானடி. பாதி படம் மட்டுமே உருவான நிலையில் பைனான்ஸ் பிரச்சனையால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படங்களின் டிரைலர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தயாரிப்பாளர் இந்த படத்தை மீண்டும் கையில் எடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் செல்வராகவன் மற்றும் சந்தானம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.