20 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணைந்துள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Mahanadi Shankar in AK 61 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் 61 வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்க வீரா, ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்தில் மகாநதி சங்கர் அவர்கள் நடிக்க இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூலமாக இவர் 20 வருடத்திற்கு பிறகு அஜித்துடன் இணைகிறார். தல என்ற பட்ட பெயரை வழங்கியவர் மகாநதி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.