Madhumitha
பிக் பாஸ் மதுமிதாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளான இன்றை மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் நினைவு கூர்ந்துள்ளார்.

Madhumitha Marriage Anniversary : தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக வலம் வருபவர் மதுமிதா. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கூட கலந்து கொண்டு பிரபலமானார்.

இவருக்கு உதவி இயக்குனரான மோசஸுடன் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இந்த மகிழ்ச்சியான சம்பவத்தை திருமணத்தில் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு நினைவு கூர்ந்துள்ளார்.

இதனால் ரசிகர்களும் மதுமிதாவுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here