மீரா மிதுன் பற்றி மதன் கௌரி பேசிய வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் அஜித் விஜய் சூர்யா குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Madhan Gowri Vs Meera Mitun : யூடியூப் பக்கத்தில் மிகவும் பிரபலமான ஒருவர் மதன் கௌரி. இவர் ஒரு நாளைக்கு ஒரு வீடியோ மட்டுமே வெளியிடுவார் ஆனால் அந்த வீடியோக்கள் அனைத்துமே மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று விடும். அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

சமீபத்தில் இவர் மீரா மிதுன் பற்றி வீடியோ ஒன்றில் பேசியிருந்தார். அந்த வீடியோவில் மீரா மிதுன் தற்போது மிகவும் பிரபலமான ஒருவராக உள்ளார்.

அவருடைய புகைப்படங்களை வைத்து வீடியோவை வெளியிட்டால் அவை மில்லியன் கணக்கில் எளிதில் பார்வையாளர்களை பெற்று விடுகிறது. இதை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளவில்லை என்றாலும் அதுதான் உண்மை என பேசியிருந்தார்.

இதனையடுத்து மீரா மிதுன் மதன் கௌரிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். இதனால் நெட்டிசன்கள் பலரும் மதன் கௌரி விமர்சிக்க தொடங்கினர்.

மேலும் மீரா மிதுன் இவ்வாறு ட்வீட் செய்ததை அடுத்து மதன் கௌரி எனக்கும் விஜய், சூர்யா மீது நிறைய மதிப்பிருக்கிறது. அவர்களைப் பார்த்து தான் நான் வளர்ந்தேன் என பதிவு ஒன்றை பதிவிட்டார்.

https://twitter.com/madan3/status/1297857096675758081?s=19

ஆனாலும் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஜித், விஜய், சூர்யா ஆகியோர் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில் அஜித் எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆன மனிதர் என தெரிவித்துள்ளார். சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலமாக நிறைய நல்ல விஷயங்களை செய்து வருகிறார் அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. மேலும் விஜய்யை என் தளபதி என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/madan3/status/1297862169187344384?s=19