மாநாடு படம் நாளை ரிலீஸ் இல்லை என கடைசி நேரத்தில் அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர்.

Maanadu Release Postponed Again : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.

மாநாடு படம் நாளை ரிலீஸ் இல்லை.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்.!!

இதனையடுத்து நாளை உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தற்போது திட்டமிட்டபடி நாளை மாநாடு திரைப்படம் வெளியாகாது என அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில் நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதன் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்திருந்தேன்.

மாநாடு படம் நாளை ரிலீஸ் இல்லை.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்.!!

தவிர்க்க இயலாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவு சென்று ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.