M.K.Stalin Strike
M.K.Stalin Strike

M.K.Stalin Strike – சென்னை: “வரும் டிசம்பர் -4 ஆம் தேதி திருச்சியில் , மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க கோரி திமுக மற்றும் அனைத்துகட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது”.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயன்று வருகிறது. மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் இந்த யோசனைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு தனது அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.

மேலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித்தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேகதாது பிரச்சினை குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது “மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கக் கோரி திருச்சியில் வரும் 4 -ஆம் தேதி அனைத்துக்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்.

கட்சி பேதங்களை கடந்து அனைத்துக்கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

பாஜகவும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.