சஞ்சய் தத் பேச்சுக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்..!

Web Ads

சஞ்சய் தத் சொன்ன வார்த்தைக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

Lokesh Kanagaraj's response to Sanjay Dutt's speech
Lokesh Kanagaraj’s response to Sanjay Dutt’s speech

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே தளபதி விஜய் வைத்து லியோ என்ற படத்தை இயக்கியிருந்தார்.இந்த படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் சஞ்சய் தத் லியோ படத்தில் என்னை லோகேஷ் வீணடித்து விட்டார் என்று பேசியிருத்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து லோகேஷ் கனகராஜ் இடம் கேட்டபோது அவர் அதற்கு பதிலளித்துள்ளார். அதாவது இந்த சம்பவம் வைரலாகியதால் சஞ்சய் சார் எனக்கு போன் போட்டு நான் வேடிக்கையாக தான் அந்தக் கருத்தை சொன்னேன் ஆனால் சமூக ஊடாகங்களில் பெரிதாக்கி விட்டார்கள் எனக்கு சங்கடமாக இருக்கிறது என்று கூறினார் நான் பிரச்சனை இல்லை சார் என்று சொல்லிவிட்டேன்.

இது மட்டும் இல்லாமல் நான் ஒரு மேதையோ அல்லது சிறந்த இயக்குனரோ கிடையாது நான் என் படங்களில் பல தவறுகளை செய்திருக்கிறேன் கண்டிப்பாக நான் சஞ்சய் தத் சாருடன் இன்னொரு படம் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

இவரின் இந்த பேச்சை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Lokesh Kanagaraj's response to Sanjay Dutt's speech
Lokesh Kanagaraj’s response to Sanjay Dutt’s speech