லியோ திரைப்படத்தில் பணியாற்றிய இயக்குனர் மிஷ்கின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் அவர்கள் தனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறி அனைவருக்கும் அறிக்கை மூலம் நன்றி தெரிவித்து பகிர்ந்திருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலானது.

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர், “உங்களுடன் நெருங்கி பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை நான் அதிர்ஷ்டமாக உணர்கிறேன், இதற்கு ஒரு மில்லியன் நன்றிகள் போதாது. நீங்கள் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டது புது புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. நான் உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது, ஆனால் ஒரு மில்லியன் நன்றி”. எனக் குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையே ஈர்த்து வருகிறது.