லியோ படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் எனக்கு கேட்க அப்டேட் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு. இந்த படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க ப்ரியா ஆனந்த் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யப் உட்பட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது அவரிடம் லியோ படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு லோகேஷ் கனகராஜ் படத்தில் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். அதே தேதியில் ட்ரெய்லர் வெளியாகவும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.