விக்ரம் படத்திலேயே லியோ குறித்து ஹிண்ட்டு கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ திரைப்படம் வெளியாக உள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், தாமஸ் மாதீவ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் தொடங்கி நடந்து வருகிறது. இதன் நிலையில் இதுவும் லோகேஷ் கனகராஜில் LCU படமாக இருக்கும் என உறுதியாக இருப்பதாக ஆதாரம் ஒன்றை வைத்து ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதாவது விக்ரம் படத்தில் புத்தகத்தில் ஜோஸ் கேஸ் விஷயமா காஷ்மீர் போனேன், அப்போ எனக்கு அவன் பழக்கமானவன் அவன் பெயர் அமர்ந்து சிஸ்டம்ல இருக்கு என பேசி இருப்பார். தற்போது லியோ படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடந்து வருவதால் நிச்சயம் லோகேஷ் கொடுத்த ஹிண்ட்டு தான் இது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அப்படியானால் இந்த படத்தில் விஜயின் பெயர் அமர் ஆக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.