LKG UKG Govt School
LKG UKG Govt School

LKG UKG Govt School – சென்னை: அரசு அங்கன்வாடி மையங்களில் வரும் 21ம் தேதி அன்று எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மானிய கோரிக்கையின் போது பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

2019 ஜனவரி மாதம் முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் இது முழுமையாக அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி முதல் 32 மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் இயங்கக்கூடிய அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கேஜி வகுப்புகள் செயல்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

‘தமிழகம் முழுவதும் 2,381 அங்கன்வாடி மையங்களில் ஜனவரி முதல் செயல்பட உள்ள இந்த வகுப்புகளுக்கு 7 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது’.

இந்நிலையில், “வரும் 21ம் தேதி, சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பள்ளியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எல்.கே.ஜி, யு.கேஜி வகுப்புகள் தொடக்கம் குறித்த இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்”.

பின்னர், இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க பள்ளிகல்வி துறை ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியரையும் நியமிக்க உள்ளது.

எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கு புது யூனிபார்ம்களும் கொடுக்கப்பட உள்ளது.,